- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பிரசாரத்தில் ஈடுபட்ட இ.பி.எஸ், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார்
கோவை, பொள்ளாச்சி, நீலகிரி லோக்சபா தொகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள், விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பொள்ளாச்சியில் அவர் பேசுகையில், ‘ஸ்டாலின் ஒரு பண்பில்லாத அரசியல்வாதி.
ஒரு முதல்வராக இருப்பதால், கட்டுப்பாட்டுடன் பேச விரும்புகிறேன். ஸ்டாலின் கண்ணிய குறைவாக பேசினால், அதற்கு நாங்களும், பதிலடி கொடுப்போம். ஏனென்றால், ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எல்லை மீறினால், வரம்பு மீறினால், அதற்கு உண்டான பேச்சை அவர் வாங்கிக் கொள்வார்.
எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது’ என்றார்.அடுத்து கோவைக்கு வந்ததும், இன்னும் காட்டம் கூடியது.’அனைவரையும் மதிக்கத் தெரிய வேண்டும். பிரதமரை கொச்சைப்படுத்தி பேசுவது, முதல்வரை கொச்சைப்படுத்தி பேசுவது, கூட்டணி கட்சித் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவது, ஒரு சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசி, அதை வைத்து அரசியலில் ஆதாயம் தேட முயற்சி செய்வது போன்றவை, மனிதப் பண்பு கிடையாது. குறைகளைச் சொல்லி, அதிலே ஆதாயம் தேடுகின்ற அரசியல்வாதிகளில் மிகத்தேர்ந்தவர் ஸ்டாலின்’ என, கடுமையாக சாடினார். இதற்கு தொண்டர்கள் கைதட்டி பலத்த வரவேற்பு அளித்தனர்.