பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

கியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிசபுரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்றுமரணமடைந்தார். அவரது மரைவுக்கு உலகதலைஅவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மரணத்தை அந்நாட்டுகுடிமக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் உற்சாகமாககொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோஇன்று அதிகாலை நேரத்தில்  மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியநிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபாகுடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக கொண்டாடிவருகின்றனர்.

பிடல் காஸ்ட்ரோ மரண செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில்அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர்.

சலைகளில் கூடிய பொதுமக்கள் மது பாட்டில்களை ஒருவருக்கொருவர்பகிர்ந்துக்கொண்டு உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.

அப்போது, கியூபாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய ஒருவர் பேசியபோது, ‘கியூபாவில் இப்போது தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

கியூபாவில் இப்போது தான் சுதந்திரமும் ஜனநாயகமும் மலர்ந்துள்ளது.

கியூபாவில் உள்ள குடிமக்கள் தங்களுடைய உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படும்உரிமையை பிடல் காஸ்ட்ரோ பறித்துவிட்டார். பிடல் காஸ்ட்ரோ கியூபாவின்புரட்சியாளர் என்பதை விட அந்நாட்டின் சர்வாதிகாரி என்பது தான் சரியானது’ எனகருத்து தெரிவித்துள்ளார்.