பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார் – முதல்வர் இ.பி.எஸ்

”பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,” என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

அரியலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, ரூ.192.59 கோடி மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார்.

நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசிலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் குடும்பம் கெட்டுப் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின் கேள்விக்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா?

பிக்பாஸில் என்ன இருக்கிறது என்று, அதை கமல் நடத்தி வருகிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவர் அல்ல. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை.

இந்த தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டு போகும். நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போகும். எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள். கமல் ஒரு நல்ல படமாவது எடுத்துள்ளாரா? திட்டங்களை செயல்படுத்தியதில், தமிழக அரசு இந்திய அளவில் முதல் மாநிலமாக செயல்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி உள்ளது என, பிரதமரே பாராட்டி உள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறார்.

அரசு அலுவர்கள் லஞ்சம் வாங்கி சிக்கி வருகிறார்கள் என கமல் கூறுகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை யார் கையில் உள்ளது. தமிழகத்தில் சிறப்பாக தானே செயல்படுகிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சு நடத்தப்படும் என்று முதல்வர் கூறினார்