- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.