- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில், கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சின்மயானந்த் உடல்நிலை மோசமடைந்தது. சிறையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆஞ்சியோகிராம் சோதனைக்காக, லக்னோவுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் சின்மயானந்த் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய நோய் மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்தது.