- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள்
பீஹாரின் சகர்சா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை விரும்பாதவர்களுக்கு இத்தேர்தலில் தக்க பதிலடி கொடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இன்று பீஹாரின் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி வாக்கில் 33% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பாட்னாவில் இன்று தனது வாக்கினை செலுத்தினார்கள். இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடி ஈடுபட்டுள்ளார். பிற்பகல் வரை இரண்டு இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தவர், ஒவ்வொரின் வாக்கும் மிகவும் சக்திவாய்ந்தது என்றார்.
சகர்சா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு வாக்குகளின் சக்தியும் பீஹார் மாநிலத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும். நமது உள்ளூர் தயாரிப்புகள் படிப்படியாக உலக சந்தையின் ஒரு பகுதியாக மாறுகிறது. ஆர்.ஜே.டி., ஆட்சி பீஹாரை அராஜகத்தின் இருளில் விட்டுச் சென்றது. நிதிஷ் குமார் ஆட்சியில் சாலைகளும், சந்தைகளும் இரவில் கூட பரபரப்பாக காணப்படுகின்றன. லாலு – ராப்ரியின் ஆட்சி காட்டாட்சியாக இருந்தது. பீஹார் மக்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவதை விரும்பாத குழு ஒன்று உள்ளது. பீஹார் தேர்தலில் இதுபோன்றவர்களுக்கு தக்க பதிலடி தர வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செலவிடப்பட்டது. தற்போது அமைய உள்ள ஆட்சி விருப்பங்களை நிறைவேற்றுவதற்கானது. காங்கிரஸ் எப்போதும் வறுமை ஒழிப்பு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற பொய் வாக்குறுதிகளை அளிக்கிறது. அதனால் இன்றைக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து நூற்றுக்கும் குறைவான எம்.பி.,க்களே அவர்களுக்கு உள்ளனர். உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் அவர்கள் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள பிற கட்சிகள் மீது சவாரி செய்கின்றனர். இவ்வாறு கூறினார்.