பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் நடத்தியது தவறு என கூட்டத்தினரிடம் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.