பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியா? – நடிகை கவுதமி மறுப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நடிகை கவுதமி போட்டியிடப்போவதாக நேற்று தகவல் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. மற்ற கட்சி களும் வேட்பாளர்களை நிறுத்து வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக வேட் பாளராக ஆர்.கே.நகரில் நடிகை கவுதமி போட்டியிட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இது போன்ற ஆதாரமில்லாத செய்தி கள் எப்படி வெளியாகின்றன என்றே தெரியவில்லை. நண்பர் கள் சிலர், ‘நீங்கள் போட்டியிடப் போகிறீர்களாமே?’ என்று கேட்ட பிறகுதான் எனக்கே விஷயம் தெரியவருகிறது. இதில் உண்மை இல்லை. முற்றிலும் வதந்தி’’ என்றார்.