- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு
கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
இந்த மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவரை யாரோ கொலை செய்துள்ளனர். சிறுபான்மையினரான எங்களுக்கு உதவி தேவை’ என்றார்.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கல்லுாரி நிர்வாகம் சார்பில் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.