
பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்த கொடையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று
பாக்.,கின் பிரபல கொடையாளர் அப்துல் சதார் எதியின் மகனும் எதி அறக்கட்டளையின் தலைவருமான ஃபைசல் எதி கடந்த ஏப்., 15ல் பாக்., பிரதமர் இம்ரானை சந்தித்து கொரோனா நிவாரணத் தொகையாக ரூ 1 கோடி வழங்கி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு நன்கொடை வழங்கியவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது

இது குறித்து எதியின் மகன் கூறியதாவது, ‘ கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து நீடித்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து பாதிப்பு உறுதியானது. இவர் தற்போது இஸ்லாமாபாத்தி்ல் நலமாக உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை தனிமையில் இருக்கிறார். இவ்வாறு கூறினார்.
இதன்காரணமாக பிதமர் இம்ரான் கானும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.