- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பாக்., தேர்தல்: இம்ரான் கானுக்கு பெரும்பான்மை இல்லை
நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போதிய பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.
நேற்று நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை வந்த தகவலின் அடிப்படையில், பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவர்கள் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.இம்ரான் கானின் பிடிஐ கட்சி 119 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தாலும், அக்கட்சிக்கு தனிப்பெரும்பானமைக்கு தேவையான137 இடங்கள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.