பாக்.,கில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை கடந்தது

பாக்.கில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சத்தை கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,085 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,6 லட்சத்தை கடந்தது. அந்நாட்டில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,475 ஆனது. இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 1,83,737 பேர் குணமடைந்தனர், இருப்பினும் 1,895 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 1,10,068 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 31,486 பேரும், கைபர் பக்டுன்க்வாவில் 14,454 பேரும் இஸ்லாமாபாத்தில் 11,385 பேரும் பலுசிஸ்தானில் 1,808 பேரும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில்1,775 பேரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 16,76,090 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,907 பரிசோதனைகள் நடந்துள்ளன இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.