- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்: ஜெய்சங்கர் உறுதி
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.

அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.