- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
- மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு
- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி
பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் உணவுவிடுதியில் சாப்பிட்டு கொண்டிருதவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபரின் செல்போன் பாக்கெட்டில் இருக்கும்போதே வெடித்து சிதறியது.
இந்தச் சம்பவம் ஜூன் 4 ம் தேதி நடந்தது. பின்னர் சி.சி.டிவி கேமரா மூலம் இந்த சம்பவம் கைப்பற்றப்பட்டது.
சி.சி.டிவி காட்சியில், ஒருவர் உணவகத்தில் தனது மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென்று அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறுகிறது. பின்னர் அவர் அவசரமாக தனது சட்டை பையில் இருந்த செல்போனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் செல்போனை எடுத்து வெளியே வீசுகிறார். இந்த காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது.
செல்போன் வெடிப்பு காரணமாக அந்த மனிதர் சிறிய தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் உணவகத்தில் இருந்தவர்களிடையே பீதியை உருவாக்கியது.