பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கும் நோய் அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘ நான் ஈ’ படம் மூலம், திரைப்பட உலகை அதிர வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. ரூ. 200 கோடி செலவில், ‘பாகுபலி’ என்ற, பிரம்மாண்டமான படத்தை உருவாக்கினார். உலகம் முழுவதும், 4,000 தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்பட்டு வசூலை வாரி குவித்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார்.

தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் ஆர் ஆர் ஆர் படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று தென்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுளளதாகவும், அவரது குடும்பத்தி்றகும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராஜமவுலி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.