பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகினர்.
தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று (ஜூன் 7) காலை நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.