- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.அலுவலகமும் இங்கு தான் உள்ளது.
இந்த அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு உள்ளனர். போலீஸ் காவலையும் மீறி மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.