- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை
- அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் – வெங்கையா நாயுடு பேச்சு
பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற யோகா சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மந்திரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டு யோகா செய்தார்கள். மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் பேசுகையில், நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவிகரமாக இருக்கும். பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மட்டும் யோகாவை சேர்ப்போமானால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவது சாத்தியமாகும், என்று குறிப்பிட்டார்.