- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்
கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 2 பாதிரியார்கள் திருவெள்ளா கோர்ட்டில் சரண் அடைந்தனர். பாவமன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை பல ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ், ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ கைதாகி தற்போது ஜாமினில் உள்ளனர். ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ் முன்ஜாமின் கேட்டிருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து அவர்கள் சரண்அடைய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து கேரள மாநிலம் திருவெள்ளா கோர்ட்டில் பாதிரியார் ஆபிரகாம் வர்கீசும், பாதிரியார் ஜெய்ஸ் ஜார்ஜ் கொல்லம் குற்றப்பிரிவு போலீசிலும் சரண் அடைந்தனர்.