- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், ‘பரோலில்’ வந்தார்.
சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை, இன்று(அக்.,12) முடிந்தது.
இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பெங்களூரு சிறை சென்றடைந்தார். அவருடன் தினகரன், புகழேந்தி உடன் வந்தனர்.
இதன் பின்னர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.