பராமரிப்பு பணி காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதி மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த கூவத்தூர் சொகுசு விடுதி பராமரிப்பு பணி காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில்  11 நாட்களாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்கவக்கப்பட்டு இருந்தனர். இதனால் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இந்த பகுதியும் இந்த விடுதியும் பிரபலமானது.

இன்று சட்டசபையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து அங்கு தங்கவைக்கப்பட்டு உள்ள  எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு அழைத்து கொண்டுவரப்பட்டனர்.

இந்த நிலையில்  கூவத்தூர் விடுதி சார்பில் வெளியே ஒரு நோட்டீஸ் ஒட்டபட்டு உள்ள்து. அதில் பராமரிப்பு பணிகாரணமாக விடுதி மூடப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.