- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

பயங்கரவாதிகளுக்கு புகலிடம்: பாக்.,கிற்கு ஹாலே எச்சரிக்கை
பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் மாறுவதை பொறுத்து கொள்ள முடியாது. இது குறித்து ஏற்கனவே அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.,விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நிக்கி ஹாலே, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்தும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பயங்கரவாதிகள் உற்பத்தி செய்யப்படுவதை நாங்கள் சும்மா கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். பயங்கரவாதிகள் புகலிடமாக மாறுவதை பொறுத்து கொள்ள மாட்டோம் என பாகிஸ்தானிடம் தெரிவித்துவிட்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச தலைமை பதவியை வகிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.