பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக மக்களை மறந்து விடாமல் அவர்களுக்காய் இலக்கியத்தையும் இசையையும் எண்ணஙகளையும் எப்போதும் ஓடவிடும் இதயம் கொண்டவர்.

சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், பேச்சாளர், உலகெங்கும் கலை இலககிய நண்பர்களை தனது சொத்தாகவும் சொந்தங்களளாகவும் பேணி வாழ்ந்து வருபவர்.

இவர்தான் கலைஞர் கோவிலூர் செல்வராஜன் .
இந்த அற்புதக் கலைஞருக்கு சர்வதேச சிறப்பு விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்தது எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனம். மேற்படி விருதினைப் பெறுவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கனடாவிற்கு வருகை தந்த அவர் இங்கு அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “ஊருக்குத் திரும்பணும்” என்னும் நூலிற்காக அறிமுக விழா ஒன்றையும் நடத்த விரும்பினார். அதற்கு கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிஙகம் மறறும் வஙகியாளர் திரு தேவதாசன் ஆகியோருடன் பலர் சேர்ந்து ஏற்பாடு செய்த “ஊருக்குத் திரும்பணும்” என்னும் நூலிற்கான அறிமுக விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள கோல்டன் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிறகு கனடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கலாநதி இ. பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.
வரவேற்புரையை மொன்றியால் வாழ் திரு கனக்ஸ், அறிமுக உரையை வங்கியாளர் திரு தேவதாசன், நட்புரையை திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், நூல் வெளியீட்டு உரையை கவிநாயகர் கந்தவனம், நூல் விமர்சன உரையை எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் ஆற்றினர்.

பல வர்த்தகப் பிரமுகர்களும் நண்பர்களும் “ஊருக்குத் திரும்பணும்” நூலின் சிறப்புப் பிரதிகளை நூலாசிரியர் கோவிலூர் செல்வராஜனிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பல கலைநிகழ்ச்சிகளும் குறிபபாக பாடகர்கள் கோவிலூர் செல்வராஜன், மொன்றியால் வாழ் அமுதன் அண்ணாமலை மற்றும் கனடியப் பாடகி அபிராமி ஆகியோர் கோவிலுர்ர் செல்வராஜன் எழுதிய பாடல்களை இனிமையாகப் பாடினர். கலைஞர்கள் பாலமுரளி, பாபு, மற்றும் நரேநதிரன் ஆகியோர் பக்கவாத்தியக் கலைஞர்களாக தங்கள் பஙகளிப்பைச் செய்தனர்.
நல்லதோர் நிறைவான மாலை நிகழ்வாக இந்த விழா நிறைவுற்று அனைவரும் இல்லம் ஏகினர்.