பன்னீர்செல்வம் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

அ.தி.மு.க.,வில், நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி.

இதனால், அணியாக செயல்பட்டபோது, தன்னோடு கூட இருந்தவர்கள் பலருக்கும் கட்சியில் பொறுப்பு அளிக்காததால், அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து, அவர், பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவே, நீளமான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என, முதல்வர் பழனிச்சாமிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.