பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சிக்கும் குரல் கொடுக்க வேண்டும் – சூர்யா

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள் களமிறங்கியபிறகு தமிழம் முழுக்க போராட்டம் நாளுக்கு நாள்அதிகரித்து

வருகிறது. அமீர், ஜிவி பிரகாஷ் உள்ளிட்டதிரையுலகினரும் களம் இறங்க துவங்கிவிட்டனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையைவெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது…

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்றவார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின்பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறிஇருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்னைகளுக்கு இளைஞர்களைஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.

தன்னெழுச்சியான போராட்டங்களின் எப்போதுமே உண்மை இருக்கும். பலநூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானதுஎன்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்புமக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணைபோகிறவர்கள் ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வதுவேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும் ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமதுகண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின்உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்டபோராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்தமாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம்வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதேபோல்ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.