பணம் வேண்டாம் ஆன்லைன், செக் மூலம் பணம் பட்டுவாடா : அரசுத்துறைக்கு மோடி உத்தரவு

ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரைஅனைவருக்கும் பணம் பட்டுவாடா ஆன்லைன் அல்லதுகாசோலை

மூலமாக நடைபெற வேண்டும் என்று மத்தியஅமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு பிரதமர்நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஊழலுக்கு முடிவுகட்டவும். தொழில் செய்வதை எளிமையாக்கவும்நோக்கத்தில், மத்திய அமைச்சகங்கள், துறைகள் இனிரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாற பிரதமர்உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. வங்கியில் டொபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாதபணத்துக்கு 60 சதவீத வரி விதிப்பது உட்பட பல விஷயங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகள் தங்களது செலவினங்களை ஆன்லைன் மூலமாகவும், செக் மூலமாகவும்மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன. ஒப்பந்ததாரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் இனிரொக்கமில்லா பணபட்டுவாடா செய்யப்படவுள்ளன.

பிரதமரின் உத்தரவையடுத்து உணவு மற்றும் வேளான்துறை அமைச்சகங்கள்ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கு மாறுவது குறித்த ஆலோசனைகளைநடத்தியுள்ளது. இதுகுறித்து, பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும்உத்தரவிடப்பட்டுள்ளது.  மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்இது குறித்து கூறுகையில், ரொக்கமில்லா பரிவர்த்தனை விஷயத்தில் பிரதமர் மோடிதீவிரமாக உள்ளார். எனது அதிகாரிகள் ரொக்கமில்லா பரிவர்த்தனை சாத்தியம்தான்என்று இதுவரை கூறினர். இந்திய உணவு கழகம், மத்திய சேமிப்பு கிடங்கு கழகம்போன்ற அமைப்புகள் ஏற்கனவே 99 சதவீதம் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளைமேற்கொண்டு  வருகின்றன என்று தெரிவித்தார்.