படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி,சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம்என்று கூட்டு எதிரணியினரிடம்தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக,நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன நிகழ்த்தியஉரை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

“இராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு இருப்பதாக, மிகவும் தீவிரமான ஒன்றைவெளியிட்டிருப்பது எதிர்பாராத ஒன்று.

இதனை அரசாங்கம் ஒரு புறக்கணிக்காது. இதுகுறித்து உன்னிப்பாக கண்காணிக்கும்.இந்த அறிக்கை சமூகத்தில் எதிர்மறையான செல்வாக்கை செலுத்தும்.

சிறிலங்கா இராணுவம் உலகில் மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்று.  தீவிரவாதத்தைஅழிப்பது தொடர்பாக அவர்களால் உலகத்துக்கு போதிக்க முடியும்.

சிறிலங்காவில் மிகமோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த போது, சிறிலங்காபடையினர், நம்பிக்கை, விசுவாசம், மிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிநிரூபித்தவர்கள்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். இராணுவத்துக்குள் பிளவுகளைஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியை கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டுக்கும், இராணுவத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் மலினத்தனமானமுயற்சிகளை அவர்கள் கைவிட வேண்டும்.

சிலர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன்,இந்த இராணுவப் புரட்சி குற்றச்சாட்டை தொடர்புபடுத்த முனைகிறார்கள்.” என்றும்அவர் குறிப்பிட்டா