- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார்.
அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கான நேர்த்தி கடனாக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். தரிசனம் நன்றாக இருந்தது என்றார்.