பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

கனடாவில் ஒரு வங்கி உத்தியோகத்தராகவும் பிரபல வீடு விற்பனை முகவராகவும் நண்பர்கள் வட்டாரத்தில் நன்கு மதிக்கப்படுகின்ற வருமான திரு பஞ்ச் சொக்கலிங்கம் இன்னும் சில மாதஙகளில் நடைபெறவுள்ள தேர்தலில் ரொரன்ரோ மாநகர சபைக்கான 42ம் வட்டாரத்தின் அங்கத்தவராக (கவுன்சிலர்) வருவதற்கு போட்டியிடுகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

தனது கடந்த காலப் பணிகளில் நன்கு அறியப்பட்டவராகவும் வெற்றியாளராகவும் திகழும் இவர்கடந்த சில வாரஙகளாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்

பஞ்ச் சொக்கலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத்தொடங்கியுள்ளதை அறிந்த வாக்காளப் பெருமக்கள் மற்றும் நண்பர்கள அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இங்கு காணப்படும் படங்களில் திரு பஞ்ச் சொக்கலிஙகம் அவர்கள் தனது இரண்டு புதல்வர்கள் (இவருக்கு புதல்விகள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சகோதரி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதைக் காணலாம்.