பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ’ வீச்சு; தோல்வி பயம் காரணமா?

பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, பஞ்சாப் முதல்வர் பாதல் மீது நேற்று ‛ஷூ’ வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

தோல்வி பயம்:

பின்னர் ‛ஷூ’ வீச்சு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதல் கூறியதாவது: என் மீது, ‘ஷூ’ எறியப்பட்ட சம்பவம், எதிரணியினர், தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம். தோல்வி பயத்தால், இத்தகைய மோசமான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்; இருப்பினும், அமைதி, பொறுமை, மத நல்லிணக்கத்தோடு, பஞ்சாப் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.