- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை
நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்., அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில், போர்னோ பிராந்தியம் அருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்தனர்.
இதில் 110 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், ஐ.நா., அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் உறுதிப்படுத்தி உள்ளார்.