நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

இதயம் கனிந்த ஆதரவு… இது வர்த்தகர்கள்;, கலைஞர்கள் நிறுவனங்கள் ஊடகங்கள் வழங்கியது..

இங்கு நிறையவே புகைப்படங்கள் இல்லை. நினைவுகள். முகநூல்ப் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஆனால் எங்களிடம் மொழி உள்ளது. அதனால் வாழ்த்துகின்றோம்..

சீனக் கலாச்சார மண்டபம் என்றபடியால் , வெறு வயிற்றுடன் வீடு செல்ல வேண்டிவரும் என்று வெளியில் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்களாம்.

ஆனால் சதேர்ன் அரோமாவின் இரவு உணவு தியேட்டருக்கு பின்னால் உள்ள மண்டபத்தை ஒரு நவீன பேங்குவற் ஹோல் தரத்திற்கு உயர்த்தி பரிமாறப்பட்டது, அதுவும் மிகவும் கௌரவமாகவும்..

வீடு செல்லும் போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது.

நினைவுகள் நிகழ்வு நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.