நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரைச் சந்திக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நெடுவாசல் மக் கள், பேச்சுவார்த்தைக்கு வந்த அதி காரிகளை திருப்பி அனுப்பினர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட் டம் நெடுவாசலில் 92-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத் தின்போது, மாவட்ட வருவாய் அலு வலர் எ.ராமசாமி, கோட்டாட் சியர்(பொ) ஜெயபாரதி, ஆலங்குடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர்.

அப்போது, “இந்தத் திட்டத் துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் உறுதி அளித் துள்ளார். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, முதல்வரைச் சந்தித்துப் பேச மக்கள் முன்வர வேண்டும்” என மாவட்ட வருவாய் அலுவலர் எ.ராமசாமி கேட்டுக்கொண்டார்.

அதற்கு போராட்டக் குழுவினர், “ஏற்கெனவே தமிழக அரசின் உத்தரவாதத்தை நம்பித்தான் போராட்டத்தை கைவிட்டோம். அடுத்த சில நாட்களிலேயே இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் விளை வாகவே 2-ம் கட்டமாக போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, இத்திட் டத்தை ரத்து செய்து, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற் றும் வரை தமிழக முதல்வரைச் சந் திக்க மாட்டோம்” எனத் தெரி வித்து, அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து, நெடுவாச லில் காஸ் சிலிண்டருக்குப் பதி லாக விறகு அடுப்பில் சமையல் செய்யும் நூதனப் போராட்டம் நடத் தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையைச் சேர்ந்த ‘மாற்றம்’ அமைப்பினரும் கலந்துகொண்டனர்.