நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனையைபார்க்கும் போது, கடந்த பொதுத்தேர்தலில் அவருக்கு வேட்பு மனு வழங்காத ஜனாதிபதிமைத்திரிபாலவின் முடிவை நியாயப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதெரிவித்துள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக சுதந்திரமானது என்று அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.