நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதி

நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணயாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பாக்.,கில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், பாக்., அரசு மறுத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வேதேச பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.