நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை

பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ நிறுவன அதிபர், மெஹுல் சோக்சி.இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில், அதன் அதிகாரிகள் உதவி யுடன், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி யோடினர். இவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த மோசடி கள் தொடர்பான வழக்கில்,

அமலாக்கத் துறை, 24ல், முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துஉள்ளது.அதில், நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், 6,400 கோடி ரூபாயை, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து, வெளிநாட்டில் உள்ள போலி நிறுவனங்களின் கணக்குகளில் திருப்பி விட்டதாககுற்றம் சாட்டப்பட்டுஉள்ளது.

அந்த குற்றப்பத்திரிகையில், நிரவ் மோடி, அவரது தந்தை, சகோதரர் நீஷல் மோடி, சகோதரி பூர்வி மோடி, மைத்துனர் மயன்க் மேத்தா, டிசைனர் நகை நிறுவனங்களான, ‘சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லார் டைமண்ட்ஸ், டைமண்ட் ஆர் யுஎஸ்’ உட்பட, 45 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை, மும்பை சிறப்பு நீதிமன்றம், இன்று பரிசீலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ், நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற் கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத் தில், மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைமுடிவு செய்துள்ளது.

நிரவ் மோடிக்கு எதிராக, ஜாமினில் வரமுடி யாத, ‘வாரன்ட்’ ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலை யில், அவரை கைது செய்து தரும்படி, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசை நாடவும், அமலாக்க

துறை முடிவு செய்து உள்ளது.இதே போன்ற நடவடிக்கையை, வெளிநாட்டில் தலைமறை வாக உள்ள, பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராகவும் எடுக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதார குற்றவாளிகள், இந்திய நீதி மன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்படாத, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து, நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில், பொருளாதார குற்ற வாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய் வதற்கான அவசர சட்டம், கடந்த மாதம் இயற்றப்பட்டது.

இத்தகைய பொருளாதார குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தும் வகையில், தற்போதுள்ள சிவில் மற்றும் கிரிமினல் சட்ட ஷரத்துக்கள் இல்லாததால், அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.