- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி பிலிப்;பைன்ஸ் பயணமானார்
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். இன்னும் ஒரு நாள் அங்கு அவர் தங்கியிருப்பார்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ_க்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸ_க்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றுவதற்காக பல தலைவர்கள் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தாலும் பிலிப்பைன்ஸிடமிருந்து இராஜதந்திர மட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்தி இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதியின் விஜயத்தின் நோக்கம் என்று கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது