“நான்காவது பரிமாணம்” நடத்திய இறுக்கமான இலக்கிய விழா

பரதேசம் போனவர்கள் (சிறுகதைகள்- எழுத்தாளர் க. நவம்), படைப்புக்களும் பார்வைகளும் (கலை இலக்கிய மதிப்பீடுகள் – க. நவம்) இயற்கையுடன் வாழுதல் (ஆரோக்கியம் சார் கட்டுரைகள் -சியாமளா நவம் – எழுத்தாளர் நவம் அவர்களின் துணைவியார் ), தடங்களைக் கடந்து செல்லும் காலநதி (கமூக அரசியல் பண்பாடு சார் கட்டுரைகள் (க. நவம்) ஆகிய மேற்படி நான்கு நூல்களின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 28ம் திகதி மாலை 3.00 மணிக்கு ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சி எம் ஆர் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பிரசாந்த் விழாவைத் தொகுத்து வழங்கினார்.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் நூல்களின் அறிமுகங்களை இளைய தலைமுறைப் படைப்பாளிகள் செய்தார்கள். அவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு சலிப்பைக் கொடுக்காமல் இறுக்கமாகவும் இனிதாகவும் அமைந்தன.
திரு நவம் அவர்களின் உரை விழாவிற்கு மகுடம் சூடியது போன்று இருந்தது. உரையின் போது சந்தத்தின் இனிமையும் கருத்துக்களின் ஆழமும், அவரது முகத்தில் பிரகாசமும் இருந்தது. சுமார் 25 வருடங்களாக கனடாவில் தமிழ் இலக்கிய கடலில் எப்போது முத்துக்களாவே அறுவடை செய்யும் க. நவம்; அவர்களது இந்த விழா மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நெஞ்சில் நிறைந்த விழாவாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.