நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் & 1 கோடி பேர் மேற்குவங்கத்தில்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை உ.பி.,யில் சுட்டதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும் என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டது. இதில், பொதுச்சொத்துகள் பல சேதமடைந்தன. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் பேரணி நடந்தது. அதில் பேசிய மம்தா, மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: போராட்டத்தில் சேதப்படுத்தும் பொதுச்சொத்துகள் யாருக்கு சொந்தமானது என அவர்கள் நினைக்கிறார்கள்? அவர்களின் அப்பாவிற்கா? பொதுச்சொத்துகள் வரி செலுத்துவோருக்கு சொந்தமானது. ஊடுருவல்காரர்கள் இங்கு வருவார்கள், உணவு சாப்பிடுவார்கள், இங்கேயே தங்கி சேதப்படுத்துவீர்கள். இது என்ன உங்கள் ஜமீனா?

பாஜ., ஆளும் மாநிலங்களில் செய்ததை போல, போராடுபவர்களை லத்தியால் தாக்கி, உ.பி., போல துப்பாக்கியால் சுட்டு சிறையில் அடைக்க வேண்டும். நம் நாட்டில் 2 கோடி முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். அதில் சுமார் 1 கோடி பேர் மேற்குவங்கத்தில் இருக்கின்றனர். அவர்களை மம்தா பானர்ஜி பாதுகாக்க முயற்சிக்கிறார். இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்.