நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்- test 2

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல்

போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்டேர்ன்

ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில

மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு

நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய

முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது

உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும்

போலந்து நாட்டில் காணாமல் போனோரும் தமிழ் மக்களின் காணமல் போனோர்

பிரச்சனைகளும் ஆகிய விடயங்கள் தொடர்பாக விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பல புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் ஆகியவற்றோடு அவர்களது உரையின் நேரம் மிகுந்த

பயன் உள்ளதாகவும் உணர்வு மிக்கதாகவும் அமைந்தது. அவர்களின் சோகத்தையும் எமது மண்ணின்

சோகத்தையும் அங்கு கூடியிருந்த அனைவரும் மௌனமாக இருந்து அனுபவித்தார்கள்.

மேலும் பலர் அங்கு உரையாற்றினார்கள். அங்கு உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண

சபையின் கார்ல்டன் தொகுதியின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் உறுப்பினரும் தமிழ்

மக்களின் நெருங்கிய நண்பருமான திரு ஜெக் மெக்லறன் உரையாற்றுகையில் இலங்கையில்

இடம்பெற்ற மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள்

மற்றும் காணாமல் போவோர் தொடர்பான சம்பவங்கள் ஆகியவை தொடர்பாக குறிப்பிட்டு

கடந்த காலங்களில் கனடிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்

சம்பவங்கள் தொடர்பான தெரிவித்த ஆட்சேபனைகளையும் குறிப்பிட்டுரூபவ் இலங்கையில் நடைபெற்ற

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கனடிய அரசு பகிஸ்கரித்த விடயத்தையும் தெளிவாகக்

குறிப்பிட்டு விடைபெற்றார்.

எமது நாட்டில் காணமல் போனோரை நாம் மறந்துவாழும் இந்த நேரத்தில் இவ்வாறான

நிகழ்ச்சிகள் மூலம் அவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் மிகவும் கொடுமையான வலிகளை

நாமும் சிறிது தாங்கும் சில கணங்களை ஏற்படுத்திக் கொடுத்த நாடு கடந்த அரசின் கனடியப்

பிரிவுக்கு பாராட்டுக்கள். –சத்தியன்.