- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா , தனது கடன்களை தான் திருப்பி செலுத்தவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்தார்.
கிங் ஃபிஷர் பியர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த விஜய் மல்லையா, பின் கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா 1 ரேஸ் போட்டிகளிலும் கால் பதித்தார். அவரை கடனாளியாக மாற்றிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தை 2005ஆம் ஆண்டு நிறுவினார் விஜய் மல்லையா.
கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக விஜய் மல்லையா மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவை மத்திய புலனாய்வு மற்றும் நிதி முறைகேடுகளை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
2012ஆம் ஆண்டு விஜய் மல்லையா தனது யூனைடெட் ஸ்பிரிட் குழுமத்தின் பெரும் பங்கை பிரிட்டனின் டியாகோ குளிர்பான நிறுவனத்திடம் விற்றார்.
அதன்படி கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2012ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து ஐந்து வருடங்கள் நஷ்டத்தில் ஓடிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு யாரும் கடன் கொடுக்க முன் வராததால், நிறுவனம் திவாளானது.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஊழியர்களுக்கு தரப்படாத ஊதியம் மற்றும் நிறுவனத்துக்கான செலுவுகள் உட்பட, விஜய் மல்லயாவின் மொத்த கடன் மதிப்புகள் மற்றும் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு புகழ்பெற்ற விஜய் மல்லையா இந்தியாவின் “ரிசர்ட் பிரான்சன்” என்றும் அழைக்கப்பட்டார்.