நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அதிக தொகுதிகளை கைப்பற்றி  2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில், “பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்” என பதிவிட்டுள்ளார்.