நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர் பதவியேற்பு: ரணில் கட்சி எம்பிக்கள் இருவர் கைது- தமிழ் எம்பிக்களை இழுக்க ராஜபக்ச தீவிரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுள்ளார்.இதனிடையே ரணில் விக்ரம சிங்க கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க் கள் நேற்று கைது செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதம ராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி நீக்கத்தை ஏற்க மறுத் துள்ள ரணில், “நானே பிரதமராக நீடிக்கிறேன்” என்று அறிவித்துள் ளார். ஜனநாயக மரபின்படி ரணில் தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார்.

பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளு மன்றம் கூடுகிறது. அன்றைய தினம் நடைபெறும் வாக்கெடுப்பில் நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவா அல்லது ரணிலா என்பது தெரியவரும்.இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ள னர். பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதில் அதிபர் சிறிசேனா, பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூட்டணிக்கு 104 எம்.பி.க்களின் ஆதரவும் ரணில் தரப்புக்கு 99 எம்பிக்களின் ஆதரவும் உள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணி லுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. வியாழேந்திரன் ஏற்கெனவே ராஜபக்ச அணிக்கு தாவிவிட்டார். கூட்டமைப்பில் தற்போது 15 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ரணில் கட்சியில் இருந்து எம்.பி.க்களை இழுக்க மஹிந்த ராஜபக்ச தரப்பினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரு கின்றனர்.

பிரதமர் இருக்கை விவகாரம்மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளு மன்றத்தில் பிரதமருக்கான இருக் கையை ஒதுக்க வேண்டும் என்று அதிபர் சிறிசேனா தரப்பில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகர் கரு ஜெயசூர்ய நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்கும் வரை மஹிந்த ராஜபக்சவை பிரதமராக அங்கீ கரிக்க முடியாது. நாடாளுமன்றத் தில் பிரதமருக்கான இருக்கையை அவருக்கு வழங்க முடியாது. தற் போது நடைமுறையில் உள்ள எதிர்க் கட்சி வரிசையிலேயே அமர வேண் டும்” என்று தெரிவித்து உள்ளார்.புதிய சபாநாயகர்இந்நிலையில் நாடாளுமன்றத் தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள் ளார். அவர் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். புதிய சபாநாயகர் நியமனத்தை ஏற்க மாட்டோம் என்று ரணில் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனிடையே ரணில் கட்சி யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஹெசான் விதானகே, பாலித தேவபெரு ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய் தனர். ராணுவ அதிகாரியை தாக்கிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.பொதுக்கூட்டம், பேரணிஇலங்கை சுதந்திர கட்சி சார்பில் தலைநகர் கொழும்பில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப் பட்டது. இதில் அதிபர் சிறிசேனாவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இதற்குப் போட்டியாக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.

ரணில் கட்சி எம்.பி.க்கள் கைது, புதிய சபாநாயகர் நியமனம், போட்டி பொதுக்கூட்டங்களால் இலங்கையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.