- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு
இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த இதுவரை மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி,ரோலர் மடி,சுருக்கு மடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால்,இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில்,4-ம்கட்ட பேச்சுவார்த்தை நவ. 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளதாக இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் தெரிவித்தார்.