- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

நவாலி படுகொலைக் கொரூரத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று அனுஷ்டிக்கப்பெற்றது
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதல் இடம்பெற்று 23-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சென். பீற் றர்ஸ் தேவாலயத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதி நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமான ங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசிய தில் 147 பேர் பலியாகினர்.
; குறித்த தினத்தில் வலிகாமம் பிரதேசங் களை நோக்கி எறிகணை தாக்குதல், விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர் காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
குறித்த தினத்தின் காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.
இக்குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தை கள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்தி லேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந் தமை குறிப்பிடத்தக்கது.