நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா!

தாய்மொழியான மலையாள படங்களில் பிசியானநடிகையான பிறகு தமிழுக்கு வந்தார் நயன்தாரா. அதேபோல் தமிழ்,

தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போதும்தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது ஒருபடத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், மம்மூட்டியுடன் அவர் நடித்த பாஸ்கர்த ராஸ்கல் என்ற மலையாள படம் தற்போது தமிழில்ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்தவேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டபோது ஏற்கனவே நடித்தகேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்துஅமலாபால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை உள்பட 4 படங்களில் அமலாபால் பிசியாகஇருப்பதால், இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை அப்படத்தில் நடிக்கவைக்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த லிங்கா படத்தில்சோனாக்ஷி சின்ஹா நடித்திருப்பதால் இந்த படத்தை அவர் ஏற்றுக்கொள்ள அதிகவாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.