- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்
நடிகர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் ‘காஷ்மோரா’ பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள் படவிழாக்களுக்கு வருவது இல்லை என்றும்,கேட்டால் நாங்கள் அந்த விழாவுக்கு வருவது சென்டிமென்டாக சரியாக இருக்காது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே பட விழாக்களுக்கு வருவது இல்லை என்கிறார்கள் என்றும் பேசினேன். அப்படி நினைக்காமல் கதாநாயகிகள் வந்து கலந்து கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பலமாக இருக்கும் என்று நகைச்சுவையாக சொன்னேன். நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. நான் உண்மையிலேயே நயன்தாராவின் ரசிகன். ‘ஐயா’ படத்தில் இருந்து அவருடைய நடிப்பை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். நயன்தாராவின் கஷ்டகாலங்களில் அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.