- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு
திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது.
நடுரோட்டில் திடீர் நடனம்
கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக் கொண்டு நடனமாடியது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது எனக்கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது; அவர்களுக்கு மிரட்டலுக்கு விடுக்கப்பட்டது.
மகளிர் கமிஷன் அதிரடி
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ” மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.