நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்

கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவரும் தமிழ்த் திரைப்படமான “விக்ரம் வேதா” வில் கதாநாயகியாக மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு நடித்து தமிழ்த் திரை இரசிகர்களை கவர்ந்தவருமான நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் இன்று காலை மிசிசாகா நகரில் உள்ள திரையரங்கொன்றில் தனது கன்னட மொழி ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அப்போது மிகவும் புத்திகூர்மையான பதில்களை தனது கன்னட மொழி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்தார். காரணம் இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மிசிகாகா நகரில் திரையிடப்பட்ட ஒப்பரேசன் அலமேலம்மா என்னும் கன்னட திரைப்படத்தின் முதல்காட்சிக்கு அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் திரையரங்கிற்கு வருவதற்கு முன்னர் மேற்படி திரைப்படம் இடைவேளை வரை திரையிடப்பட்டு அதை ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி முதல்காட்சிக்கு அழைக்கப்பட்;டிருந்த தமிழ்நாடு சமூக முன்னேற்ற மன்றத்தின் தலைவர் திரு வள்ளிக்கண்ணன் மற்றும் வர்த்தகப் பிரமுகர் திரு சங்கர் நல்லதம்பி ஆகியோர் மலர் செண்டு வழங்கி நடிகை ஸரத்தா ஶ்ரீநாத் அவர்களை கௌரவித்தார்கள்.