நடிகை ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? நடிகர் சிம்பு மறுப்பு

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவி‌ஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.

அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. பிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். அதன்பிறகு ஓவியாவிடம் பேசுவதையும் தவிர்த்தார். ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. பின்னாலேயே சுற்றினார்.

பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு உள்ளானார். வீட்டுக்கு வெளியில் கொட்டும் மழையில் பாயை விரித்து படுத்தார். விடிய விடிய பிக்பாஸ் வீட்டுக்குள் தூங்காமல் சுற்றிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக கூறபட்டது. பின்னர் அவர் நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலையில் சமூவலைதளத்தில் எஸ்டிஆர் என்ற பெயரில் உள்ள டுவிட்டர் பதிவில் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள தயார் ஓவியா எதையும் எதிர்கொள்ளும் தைரியாமான பெண் உங்களுக்கு கடவுளின் ஆசிகள் என பதிவிடப்பட்டு இருந்தது. ஆனால் இது நடிகர் சிம்பு பெயரில் எஸ்டிஆர் என போலி பெயரில் உள்ள கணக்கும் ஆகும். இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகர் சிம்பு – ஓவியாவை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து சிம்பு தரப்பினரிடம் விசாரித்தால், “அது போலியான ட்விட், கடந்த காலங்களில் இப்படி சிம்பு ட்விட்டரில் வெளியிட்டதாக பல போலி செய்திகள் வந்துள்ளன. ஆனால் அடிப்படையற்ற இது போன்ற போலி செய்திகளை மீடியாக்களும் வெளியிடுவது வருத்த மளிக்கிறது. இது போன்ற மலிவான செயல்கள் மூலம் சிம்பு விளம்பரம் தேடிக்கொள்பவர் அல்ல. இது சிம்புவை பின் தொடர்பவர்களுக்கு தெரியும். #God_Blessings என்கிற ஹேஷ்டேக் செய்திருப்பதைப் போன்று அந்த போலி பதிவில் இடம் பெற்று இருக்கிறது. அப்படிப்பட்ட ஹேஷ்டேக் உருவாக்கப்படவேயில்லை. இதன் மூலம் அந்த டுவிட் போலியானது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது” என்கின்றனர்.

தற்போது இதற்கு நடிகர் சிம்பு மறுப்பு தெரிவித்து உள்ளார். தற்போது நடிகை ஓவியாவை திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலை நடிகர் சிம்பு மறுத்துள்ளார். அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செய்தியை மட்டும் ஏற்குமாறு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.